Monday, June 8, 2009

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

1. அரசியல் வாதிகள் தப்பு பண்றாங்க அப்டின்ன தெரிஞ்சும் அவங்களுக்கே வோட்டு போடுரமே ஏன்?

ஜெயிச்ச பின்னாடி நம்ம தொகுதிக்கே வரமாட்டங்க அப்படின்னா தெரிஞ்சும் தைரியமா வோட்டு போடறோமே அது ஏங்க?

(அம்புட்டு நல்லவங்களா நாம ?)



2. விஜய், அஜித், பத்தாததுக்கு இப்போ புதுசா விஷாலு இப்படி மாறி மாறி நம்மள இம்சை பண்ணினாலும் அதே படத்த தியேட்டர்ல போய் நம்ம செலவுலேயே சூனியம் வச்சுக்குரோமே அது ஏன் ?

3. நம்ம நாட்டு பிரச்சினையே தீக்க முடியாம இருக்கறப்போ வெளிநாட்டு பிரச்சனைய பேசி துண்டு துக்கடா கட்சி தலைவருங்க நம்மள குழப்புறாங்களே அது ஏன்?

4. ஒரு ஒரு தொலைக்காட்சியிலும் அவங்களுக்கு ஏற்ற மாதிரி செய்திகள சொல்லி மக்களை குழப்புரான்களே அது ஏன்?

5. நாட்டோட முக்கியமான தூணா இருக்க வேண்டிய செய்தித்தாள் நிறுவனங்களே அவங்களோட இஷ்டத்துக்கு தவறான செய்திய போட்டு குழப்புரான்களே அது ஏன்?